வண்டலூர், கிண்டி பூங்காக்கள் டிச.23, 30-ல் இயங்கும்

வண்டலூர், கிண்டி பூங்காக்கள் டிச.23, 30-ல் இயங்கும்
Updated on
1 min read

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் இம்மாதம் 23, 30 ஆகிய தேதிகளில் வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவற்றுக்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும். ஆனால் தற்போது பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பூங்காவை விடுமுறை நாட்களில் திறந்து வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து இம்மாதம் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in