Published : 28 Dec 2014 11:16 AM
Last Updated : 28 Dec 2014 11:16 AM

ராஜபக்சவை தோற்கடிப்பதற்கான ராஜதந்திர செயல்களில் ஈடுபட வேண்டும்: மத்திய அரசுக்கு இளங்கோவன் கோரிக்கை

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவை தோற்கடிப்பதற்கான ராஜதந்திர செயல்களில் இந்திய அரசு ஈடுபட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் இளங் கோவன் நேற்று கூறியதாவது:

பொதுவாழ்வில் தூய்மை யுடன் வாழ்ந்து வரும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 90-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கோட்சே மிகப்பெரிய தியாகி என்று பாஜக எம்.பி. சாக் ஷி மகராஜ் கூறியுள்ளார். நாட்டுக் காக தன்னையே அர்ப்பணித் துக்கொண்ட தேசப்பிதா காந்தியடி களை கொன்ற கோட்சேவை தங்கள் கட்சி எம்.பி. புகழ்ந்து பேசியதற்கு பாஜகவினர் மறுப்பு தெரிவிக்கவில்லை.

மேலும் இந்து மகா சபையை சேர்ந்தவர்கள், கோட்சேவுக்கு மார்பளவு சிலை வைக்க வேண்டும் என்று கூறி போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. கோட்சேவை புகழ்ந்து வெளிப் படையாக பேசுபவர்கள், சுவரொட்டி ஒட்டுபவர்களை கைது செய்ய தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துத்துவத் துக்கு எதிராக குரல் கொடுக்கும் கட்சிகளுடன் இணைந்து போராட தயாராக உள்ளோம்.

தமிழக போக்குவரத்துத்துறை ஊழியர்கள், புதிய ஊதிய ஒப்பந்தம் கோரி வரும் 29-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதில் காங்கிரஸின் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கமும் பங்கேற்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்’ நூலுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவது எழுத்தாள னின் சுதந்திரத்தை பறிக்கும் செயல். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் சிமென்ட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக, தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும். தமிழகத்துக்கு வரும் 4-ம் தேதி ராகுல் காந்தி வருவதாக இருந்தது. சில காரணங்களால் அவரால் இப்போது வரமுடியவில்லை.

இன்சூரன்ஸில் அந்நிய முதலீட்டை கொண்டுவர நாங்கள் முயன்றபோது எதிர்த்த பாஜக, இப்போது அவசரச்சட்டம் கொண்டு வந்துள்ளது.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x