நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: அவசர சட்டத்தை நிறைவேற்றக்கூடாது - மத்திய அரசுக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: அவசர சட்டத்தை நிறைவேற்றக்கூடாது - மத்திய அரசுக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்
Updated on
1 min read

நிலங்களை கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ராமதாஸ்:

நிலங்களை கையகப் படுத்துவதில் உள்ள கட்டுப்பாடு களை நீக்குவதற்கான அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. கோடிக்கணக்கான விவசாயிகளை பாதிக்கும் இந்தச் சட்டத்தை கொல்லைப்புறமாக கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. நேரடியாக மக்களுக்கு அளித்த வாக்குறுதி களை நிறைவேற்றாத நரேந்திர மோடி அரசு, தொழிலதிபர்களுக்கு மறைமுகமாக அளித்த வாக்குறுதி களை நிறைவேற்றத் துடிப்பதன் விளைவுகள்தான் இந்த அவசரச் சட்டங்கள். இந்த அவசரச் சட் டத்தை மட்டுமல்ல, வேளாண் விளை நிலங்களை கையகப் படுத்தும் எண்ணத்தையே மத்திய அரசு அடியோடு கைவிட வேண்டும்.

வைகோ:

பாஜக அரசு, அவசரச் சட்டம் மூலம் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முயற்சிப்பது முழுக்க முழுக்க ஜனநாயக விரோத நடவடிக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த விவசாயி களுக்கும் எதிரானதாகும். மோடி அரசு அறிமுகப்படுத்த உள்ள ‘இந்தியாவில் தயாரிப்பு’ திட் டத்தை செயல்படுத்த பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு நிலங் களை விவசாயிகளிடம் இருந்து சட்டப்பூர்வமாக பறித்து தாரை வார்க்க அவசரச் சட்டம் மூலம் வழிவகை செய்திருப்பது வன்மை யான கண்டனத்துக்குரியது.

திருமாவளவன்:

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் தொடர் பான சட்டத்தை பலவீனப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்ய மோடி அரசு முனைந்துள்ளது. இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டால் விளை நிலங்களை எளிதாகக் கையகப்படுத்தி கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு கொடுத்துவிட முடியும். எனவே, இந்த மக்கள் விரோத அவசரச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in