அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்கள்: பழவேற்காடு கலவர கிராமத்தில் பரபரப்பு

அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்கள்: பழவேற்காடு கலவர கிராமத்தில் பரபரப்பு
Updated on
2 min read

பழவேற்காட்டில் கலவரப் பகுதிகளை பார்வையிட வந்த வருவாய்துறை அமைச்சர் ரமணாவை மீனவர்கள் முற்றுகை யிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டை அடுத்த சின்னமாங்கோடு கிராமத்தில், கடந்த சனிக்கிழமை நொசிக்குப்பம் மற்றும் ஆந்திர மீனவர்கள் சுமார் இரண்டாயிரம் பேர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதில், காவல்துறை ஏடிஎஸ்பி ஸ்டாலின் உள்பட ஏழு போலீஸார் காயம் அடைந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. போலீஸாரின் அலட்சியமே கலவரத்துக்கு காரணம் என மீனவர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆன நிலையில், ரமணா திங்கள்கிழமை சின்னமாங்கோடு கிராமத்துக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது, அக்கிராமத்தினர் அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கலவரத்தில் ஈடுபட்ட ஆந்திர மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாடாளு மன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரித்தனர். அவர் களை சமாதானம் செய்த அமைச்சர் “பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உரிய நிவாரணம் வழங்கப் படும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும்” என உறுதி அளித்தார். அதன் பின்னர் புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் காரணமாக, அப்பகுதி யில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அலட்சியப் போக்கே, பழவேற்காட்டில் மீனவ கிராமங்களில் நிகழ்ந்த கலவரத்துக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரி தமிழகம் ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. ஆந்திர பகுதியில் போதிய மீன்வளம் இல்லாததால், அப்பகுதி மீனவர்கள் தமிழக எல்லையான சின்னமாங்கோடு பகுதியில் உள்ள குருவித் திட்டுக்கு நொச்சிக்குப்பம் மீனவர் களுடன் வந்து வந்து மீன் பிடிக்கின்றனர். இதனால், இரு மாநில மீனவர்களிடையே அடிக் கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை பெரும் கலவரமாக வெடித்தது. இதற்கான காரணம் குறித்து, திருவள்ளூர் மாவட்ட ஐக்கிய பாரம்பரிய மீனவ சங்கத்தின் பொதுசெயலாளர் துரை. மகேந்தி ரன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

கடந்த 8-ம் தேதி இருதரப் பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில், நொச்சிக்குப்பம் மீனவர்கள் ஏழு பேர் காயம் அடைந்தனர்.

கண்டுகொள்ளாத போலீஸ்

இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போதே புகார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் பிரச்சினை இவ்வ ளவு தூரம் பெரிதாவற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. மேலும், சின்னமாங்கோடு கிராமத் தில் புகுந்து தாக்குதல் நடத்தப் போவதாக, நொச்சிக்குப்பம் மீனவர்கள் கடந்த வெள்ளிக் கிழமையே தீர்மானம் போட்ட னர். அதுபற்றி தகவல் அறிந்த தும் சின்னமாங்கோடு மீனவர் கள் கிராமத்தைவிட்டு வெளியேறி னர்.

இதுகுறித்து தகவல் அறிந் தும் போலீஸார் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. குறைந்த எண்ணிக்கையி லான போலீஸார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு துரை.மகேந்திரன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in