சிறுமிகள் பாலியல் வழக்கு: எஸ்ஐ சஸ்பெண்ட்

சிறுமிகள் பாலியல் வழக்கு: எஸ்ஐ சஸ்பெண்ட்
Updated on
1 min read

சிறுமிகள் பலாத்கார வழக்கில் மேலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் சிறமிகளை சிலர் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள் என்று குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தலைவர் வித்யா ராம்குமார் போலீஸில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் சிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 3 சிறுமிகளை மீட்டனர்.

இதுதொடர்பாக புரோக்கர்கள் புஷ்பா, அருள் மேரி, ரகுமான் உட்பட 9 பேரை கைது செய்த னர். விபச்சார கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 8 போலீஸார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி பிரகாஷ் முன் னிலையில் விசாரணைக்கு வந்த போது, சிறுமிகளை பலாத்காரம் செய்த போலீஸாரை அடையாளம் காண்பதற்காக போலீஸார் அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டுமென உத்தரவிட்டார்.

அதன் பேரில் கடந்த 18ம் தேதி போலீஸார் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. அதில் 9 போலீஸாரை சிறுமிகள் அடையாளம் காட்டியதாக தெரிகிறது. அதனை புதுச்சேரி குற்றவியல் நீதிபதி விஜயகுமாரி வீடியோ கான்பிரன்சிங் மூலம் பார்வையிட்டார். சிறுமிகள் அடையாளம் காட்டிய போலீஸாரை கைது செய்ய போலீஸ் ஐஜி பிரவீர் ரஞ்சன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சிறுமிகள் பாலியல் வழக்கில் தொடர்புடைய முதிலியார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அனுஷாபாஷா, ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அனுஷாபாஷாவை சஸ்பெண்ட் செய்து ஐஜி பிரவீர் ரஞ்சன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in