Published : 17 Dec 2014 08:38 AM
Last Updated : 17 Dec 2014 08:38 AM

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்கத் திட்டம்

கூடங்குளம் முதலாவது அணு உலையில் இதுவரை 300 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் ரூ. 366 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.

கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் ரூ. 500 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் ஒருபகுதியாக 10 ஆயிரம் பேருக்கு குடியிருப்புகள் கட்டித் தரப்படு கின்றன. இப்பணிக்காக கூடங்குளம் அணு உலை சார்பில் 2-ம் கட்டமாக ரூ. 55 கோடி நிதி வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.கருணாகர னிடம் காசோலையை கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் சுந்தர் கூறியதாவது:

300 கோடி யூனிட்

தற்போது கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்தி தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 300 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒரு யூனிட் மின்சாரம் ரூ.1.22-க்கு விற்கப்படுகிறது. இதுவரை ரூ.366 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு 50 சதவீதம்

உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழகத்துக்கே அளிக்கப்பட்டுள்ளது. வணிகரீதியில் மின் உற்பத்தி யைத் தொடங்க அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

2-வது அணு உலையில் விரைவில் வெப்பநீர் சோதனை ஓட்டம் நடத்தப்பட வுள்ளது. இச்சோதனை நடக்கும்போது நீராவி வெளியேறும் சத்தம் கேட்கும். சுற்றுப்புற மக்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இருக்காது.

3, 4-வது அணு உலைகள்

இங்கு 3, 4-வது அணு உலைகளை நிர்மாணிக்க பூர்வாங்க பணிகள் தொடங்கி இருக்கின்றன. மார்ச் மாதத்தில் அஸ்திவாரம் தோண்டும் பணியும், 2016-ம் ஆண்டில் கான்கிரீட் பணியும் தொடங்கும். இப்பணிகள் 72 மாதங்களில் நிறைவடையும். 3 மற்றும் 4-வது அணு உலைகள் ரூ. 39,746 கோடியில் அமைக்கப்படவுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x