

தமிழகத்தில் டாஸ்மாக் கடை களில் விற்பனை செய்யப்படும் மது வகைகளின் விலை இன்று முதல் உயருகிறது.
தமிழக அரசுக்கு அதிக அளவில் வருவாய் தரும் நிறுவன மாக டாஸ்மாக் விளங்கி வருகி றது. தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்குக் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.21,641 கோடி வருவாய் கிடைத்தது. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.21,680 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இதுபோல், 2011-12-ல் ரூ.18,081 கோடி வருவாய் கிடைத்தது.
கடந்த நிதியாண்டில், அதற்கு முந்தை நிதியாண்டைக் காட்டிலும், ரூ.40 கோடி விற்பனை குறைந்தது.
இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் மது விலையை அரசு உயர்த்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி டாஸ்மாக் மது வகைகள் விலை உயர்த்தப்பட்டன.
இந்நிலையில் இன்று முதல் சாதாரண மது வகைகள் விலை குவாட்டருக்கு ரூ.10-ம், பிரீமியம் (புல் பாட்டில் ரூ.200-க்கு மேல் இருக்கும் ரகங்கள்) வகைகளின் விலை குவாட்டருக்கு ரூ.20-ம் உயருகிறது.
இந்நிலையில் இன்று முதல் சாதாரண மது வகைகள் (குவாட்டர் ரூ.100-க்குள் இருக்கும் ரகங்கள்) விலை ரூ.8-ம், நடுத்தர வகைகள் (குவாட்டர் ரூ.100 முதல் 200-க்குள்) விலை ரூ.10-ம், பிரீமியம் வகைகள் (ரூ.200-க்கு மேல் இருக்கும் ரகங்கள்) விலை ரூ.20-ம் உயருகிறது. ஒரு புல் பாட்டில் விலை ரூ.40 முதல் ரூ.80 வரையும் விலை உயர்த்தப்படுகிறது. இதுபோல் பீர் விலையும் ரூ.10 வரை உயர்கிறது என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.