கழிவுநீர் குழாய்களை ஆய்வு செய்ய சிசிடிவி கேமரா

கழிவுநீர் குழாய்களை ஆய்வு செய்ய சிசிடிவி கேமரா
Updated on
1 min read

சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவ மழை காரணமாக எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அண்ணா பிரதான சாலை மற்றும் நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே 5 இடங்களில் பள்ளம் ஏற்பட்டது.

இந்த பள்ளங்கள் அனைத்தும் மிகவும் ஆழமான கழிவுநீர் அகற்றும் பிரதான பாதாள சாக்கடை குழாய்கள் அருகே ஏற்பட்டுள்ளன.

இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் குழாய்களை சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்ய ஒரு நிறுவனம் பணியமர்த்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் வழங்கும் தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில் இனிவரும் காலங்களில் பள்ளங்கள் ஏற்படாதவாறு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in