Published : 06 Nov 2014 01:59 PM
Last Updated : 06 Nov 2014 01:59 PM

பெண் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் ஆய்வு

பெண் கைதிகளுக்கான சிறைகளில் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை எடுத்துக் கொண்டது.

அதுகுறித்து தலைமைப் பதிவாளர் தாக்கல் செய்த மனுவில், "சிறை சீர்திருத்தங்களுக்கான அகில இந்திய குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், சிறைகளுக்கு வரும் பார்வையாளர்களில் யாரையெல்லாம் அனுமதிப்பது என்பது குறித்து கொள்கை முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட குழு அமைக் கப்பட்டது. அந்தக் குழு அளித் துள்ள பரிந்துரைகளை விரைந்து அமல்படுத்த வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

அதுபோல, விழுப்புரம் மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் தாக்கல் செய்த மனுவில், "விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பெண் கைதிகளுக்கு தனி லாக்கப் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அங்கு கழிப் பறை, காற்றோட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் கொண்ட முதல் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சிறைகளில் என்னென்ன சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று சிறைத்துறை டி.ஐ.ஜி. அறிக்கை தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றம் நியமித்த அட்வகேட் கமிஷனர், பெண் கைதிகளுக்கான சிறைகளில் பல பிரச்சினைகள் இருப்பதாகவும், அங்கு தொடர் கண்காணிப்பு அவசி யம் என்றும் கூறியுள்ளார்.

மாநில சட்டப்பணிகள் ஆணையக் குழு திடீர் சோதனை செய்து 3 மாதங்களுக்கு ஒருமுறை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கண்காணிப்பு போதும் என்று உயர்நீதிமன்றம் கருதும் வரை கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x