

பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் எனவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விருதுநகரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பலத்த மழை பெய்ததால் தொண்டர்கள் கலைந்து சென்றனர். சிறிது நேரம் கழித்து மழை நின்ற பிறகு, தொண்டர்கள் மீண்டும் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.