சோனியா, ராகுல் தலைமையிலான கட்சியே உண்மையான காங்கிரஸ்: கே.வி.தங்கபாலு பேட்டி

சோனியா, ராகுல் தலைமையிலான கட்சியே உண்மையான காங்கிரஸ்: கே.வி.தங்கபாலு பேட்டி
Updated on
1 min read

சோனியாகாந்தி, ராகுல்காந்தி தலைமையிலான கட்சியே உண்மையான காங்கிரஸ் கட்சி என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார்.

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தமிழகத்தில் தமாகா (தமிழ் மாநில காங்கிரஸ்) உருவானாலும், சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் தலைமையில் இயங்கும் கட்சிதான் உண்மையான காங் கிரஸாகும். நான் மாநிலத் தலைவராக இருந்தபோதும் சரி, அதற்குப் பிறகும் சரி, இன்று வரை காமராஜர் படம் உறுப்பினர் அட்டையில் இடம்பெற்று வருகிறது. இது என்றும் தொடரும்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கட்சியின் மாநிலத் தலைவருக்கு எனது ஒத்துழைப்பை எப்போதும் அளிப்பேன்.

காங்கிரஸில் மட்டுமே கோஷ்டி அரசியல் இருப்பதாகக் கூறுவது தவறு. எந்தக் கட்சியில்தான் கோஷ்டி அரசியல் இல்லை? எல்லா கட்சியிலுமே கோஷ்டிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை இடும் கட்டளையை ஏற்று அனைவரும் ஓரணியில் இருப்போம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in