

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்துப் பேசினார்.
வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மரியாதை நிமித்தமாக நல்லக்கண்ணுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் இளங்கோவன் திமுக தலைவர் கருணாநிதியையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.