

பழவேற்காட்டில் சனிக்கிழமை நடத்திய தாக்குதல் தொடர்பாக ஆந்திர மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டனர். 200 பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர எல்லையை ஒட்டியிருக்கும் நொச்சிக்குப்பம், பாட்னகுப்பம் கிராமங் களில் இருக்கும் மீனவர்கள் ஆயிரம் பேர் ஈட்டி, கத்தி, அரிவாள், பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங் களுடன் சின்னமாங்கோடு கிராமத்தில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில், ஏடிஎஸ்பி ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் உட்பட ஏழு போலீஸார் காயம் அடைந்தனர்.
மேலும், அங்குள்ள வீடுகள், படகுகள் ஆகியவற்றை தீ வைத்துக் கொளுத்தினர். பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்து, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், வடக்கு மண்டல ஐஜி மஞ்சுநாத், டிஐஜி சத்திய மூர்த்தி, எஸ்பி சரவணன் மற்றும் அதிகாரிகள் பாதிக் கப்பட்ட கிராமங்களை நேரில் பார்வை யிட்டனர். இக்கலவரம் தொடர்பாக, ஆரம்பாக்கம் போலீஸார் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், ஆந்திர எல்லைக்கு உள்பட்ட ராமாபுரம் குப்பத் தைச் சேர்ந்த குமார், குள்ளன், சந்தானம், மகாதேவன், பாலகிருஷ்ணாபுரம் குப்பத்தைச் சேர்ந்த ராஜா, சுமன், வெங்கடேசன், நைனார் கொள்ளாபுரி, ஜானகிராமன், சுகுமார், பீமார்பாளையத்தைச் சேர்ந்த மதி, சண்முகம், தாஸ், நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த குப்பன் ஆகிய 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், பலரை கைது செய்வதற்காக நொச்சிக்குப்பம் கிராமத்துக்கு போலீஸார் சென்றனர். அப்போது, வாகனங்கள் வருவதைத் தடுக்கும் வகையில் பெண்கள் சிலர் சாலையின் நடுவே பள்ளம் தோண்டி வைத்திருந்தனர். இதையடுத்து, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, 200 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, நொச்சிக்குப்பம், சின்னமாங்கோடு உள்ளிட்ட கிராமங்க ளில் ஆயுதம் தாங்கிய போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சென்னையில் இருந்து 40 கமாண்டோ படை வீரர்கள் ஞாயிற்றுக் கிழமை பழவேற்காட்டிற்கு வந்தனர். அவர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீனவர் பிரச்சினையை தீர்க்க ஆந்திர போலீஸாரின் உதவியையும் தமிழக அதிகாரிகள் நாடி உள்ளனர். தொடர்ந்து பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் பதற்றமான நிலை நீடித்து வருகிறது.