முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்

முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்
Updated on
1 min read

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் வெளிநாட்டு சிறைக் கைதிகள் 32 பேர் அடைத்து வைக்கப்பட் டுள்ளனர். இவர்களில் 31 பேர் இலங்கைத் தமிழர்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பலர் இங்கு கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர் தங்களை விடுதலை செய்யக்கோரி நேற்று திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்தி உதவி ஆட்சியர் நடராஜன், கியூ பிரிவு போலீஸ் டிஎஸ்பி பால்வண்ண நாதன் ஆகியோர் முகாம் சிறைக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த் தையில் உடன்பாடு ஏற்படாததால் உண்ணாவிரதம் தொடர்வதாக முகாம் சிறையிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் அறிவித்துள்ளனர்.

உண்ணாவிரதமிருக்கும் இலங்கைத் தமிழர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக் களை உயரதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக முகாம் சிறை அலுவலர்கள் தெரிவித் துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in