இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களுடன் இந்திய தூதர் சந்திப்பு

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களுடன் இந்திய தூதர் சந்திப்பு
Updated on
1 min read

இலங்கை உயர் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை, இந்திய தூதர் ஓ.கே.சின்கா நேற்று கொழும்பு வெளிக்கடா சிறைச் சாலையில் சந்தித்து பேசினார்.

கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டி ருந்த அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாத், லாங்நெட் ஆகிய ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்தனர். பின்னர் இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்திய தாக வழக்கு பதிவு செய்து அவர் களை சிறையில் அடைத்தனர்.

இதனைக் கண்டித்து, ராமேசு வரம் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பாவி மீனவர்கள் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளதை உணர்ந்த தமிழக அரசு, யாழ்ப்பாணத்தி லுள்ள இந்திய துணைத் தூதரகம் மூலம் 5 மீனவர்களுக்கான வழக்கை நடத்தி வந்தது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மீனவர்கள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து, கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப் பளித்தது. இந்தத் தீர்ப்பு தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.‑

இந்நிலையில், கொழும்பு வெளிக்கடா சிறைச்சாலையில் நேற்று தூக்கு தண்டனை கைதி களுக்கான தனிச்சிறையில் தமிழக மீனவர்கள் 5 பேரையும் இலங்கைக்கான இந்திய தூதர் ஓ.கே.சின்கா சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்கா, தமிழக மீன வர்கள் 5 பேரையும் விடுவிக்க மத்திய அரசு அனைத்து நட வடிக்கைகளையும் மேற் கொள்ளும் என்றும், மீனவர்கள் தங்களது உறவினர்களுடன் தொலைபேசி மூலம் பேச ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in