

தமிழகத்தில் முதல்முறையாக சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாளை துணை வேந்தர் அறிமுகம் செய்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கலைக் கல்லூரிகள் இயங்குகின்றன. 13 அரசு கல்லூரி கள், நான்கு அரசு உதவிபெறும் கல்லூரிகள், 5 உறுப்புக் கல்லூரி கள், 65 தனியார் கல்லூரிகள் மற்றும் தருமபுரியில் முதுநிலை விரிவாக்க மையம் என ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவ - மாணவிகள் பெரியார் பல்கலைக் கழகத்தில் படிக்கின்றனர்.
மாணவ - மாணவியருக்கு புகைப்படத்துடன் கூடிய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. தற்போது பெரியார் பல்கலைக்கழகம் முன் மாதிரி முயற்சியாக, புகைப்படத் துடன் கூடிய விடைத்தாளை துணை வேந்தர் அறிமுகம் செய்துள்ளார்.
புகைப்படத்துடன் கூடிய விடைத் தாளை அறிமுகம் செய்துவைத்தார் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுவாமிநாதன்