ஸ்கைவாக், ஸ்பென்சர் பிளாசாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஸ்கைவாக், ஸ்பென்சர் பிளாசாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Updated on
1 min read

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா மற்றும் அமைந்தகரையில் உள்ள ஸ்கை வாக் வணிக வளாகங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. புரளி கிளப்பிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னையில் உள்ள முக்கிய மான வணிக வளாகங்களில் ஸ்பென்சர் பிளாசா, ஸ்கைவாக் ஆகியவை முக்கியமானவையா கும். இங்கு தினமும் ஆயிரக்கணக் கானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று காலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

அதில் பேசியவர், ‘‘ஸ்கைவாக், ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது எந்த நேரத்திலும் வெடிக்கும்’’ என்று சொல்லிவிட்டு போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மோப்ப நாய் களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்றனர்.

ஒவ்வொரு மாடியாக சோதனை நடந்தது. அங்கு இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. திரைப்படங்கள் திடீரென நிறுத் தப்பட்டன. திரைப்படம் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள், என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே நின்றனர். தகவல் அறிந்ததும் ஏராளமானோர் அங்கு கூடி நின்றனர்.

ஸ்பென்சர் பிளாசா கட்டிடத்தி லும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். பல மணி நேரம் தேடியும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே புரளி ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரிந்தது.

மிரட்டல் வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்த போது, அந்த செல்போன் எண் ஒரு பெண்ணின் பெயரில் இருப் பது தெரிந்தது. ஆனால், நேற்று காலையிலேயே, செல்போன் தொலைந்துவிட்டதாக அந்த பெண் எழும்பூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

எனவே, செல்போனை திருடிய நபர்தான் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்தது. அந்த மர்ம நபரை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in