

குரூப்-2 மெயின் தேர்வு கடந்த 8, 9-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. சென்னை உட்பட பல்வேறு மையங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினர்.
காலையில் பொது அறிவு பாடத்தில் கொள்குறிவகையில் ஆன்லைன் தேர்வும், பிற்பகல் விரிவாக விடையளிக்கும் தேர்வும் நடந்தன.
இந்நிலையில், பொது அறிவு கேள்விகளுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைகளில் ஏதேனும் விளக்கம் அளிக்க விரும்பினால் அதுகுறித்த விவரங்களை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு வருகிற 20-ம்தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.