Last Updated : 03 Jul, 2019 04:02 PM

 

Published : 03 Jul 2019 04:02 PM
Last Updated : 03 Jul 2019 04:02 PM

புதுச்சேரியில் காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் திமுக: கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலை கடந்து சாதிக்குமா?

வரும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை புதுச்சே ரியில் திமுக எடுக்க தொடங்கியுள் ளது. ஆனால், கட்சிக்குள் கோஷ்டி பூசல் நிலவும் சூழலில் அடுத்து ஆட்சி என்ற திமுகவின் கனவு நனவா குமா என்ற கேள்வி தொண்டர் களிடையே எழுந்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக - காங் கிரஸ் கூட்டணி வென்று ஆட்சிய மைத்தது. திமுக எம்எல்ஏக்கள் சிவா, கீதா ஆனந்தனுக்கு வாரியத் தலைவர்கள் பதவிகள் தரப்பட்டன. மேலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஐவருக்கும் வாரியத் தலைவர்கள் பதவிகள் அளிக்கப்பட்டன.

ஓராண்டு முடிந்த நிலையில் பதவி நீட்டிப்பை ஆளுநர் கிரண்பேடி தராததால் திமுக எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிப்படையாக கட்சியில் தங்கள் நிலையை வெளிப் படுத்த தொடங்கினர்.

இந்நிலையில் வீட்டு வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என பலவித வரியை காங்கிரஸ் அரசு விதிக்கத் தொடங்கியது. அதை திமுக விமர்சித்தது. இதற்கிடையில் மக்களவைத் தேர் தல் வரை இணைந்து பணியாற்றினர். மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியமைத்த சூழலில் மீண்டும் பிரச்சினை கிளம்பி யுள்ளது.

அண்மையில் திமுக நடத்திய தெற்கு மாநில செயற்குழு கூட்டத் தில் கூட்டணி அரசை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, புதுச்சேரியில் தேர்த லுக்குப் பிறகு உயர்த்தப்பட்ட சொத்துவரி, வீட்டுவரி, குப்பைவரி உள்ளிட்ட வரிகள் குறைக்கப்படும் என்று அறிவித்த அறிவிப்பு கிடப் பில் இருக்கிறது. உடனடியாக புதுவை மக்களை பாதிக்கும் மேற்கண்ட வரி விதிப்புகளை குறைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அப்படி குறைக் கக்கூடிய நடவடிக்கைகளை புதுவை அரசு மேற்கொள்ள வில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டத்தை கட்சித்தலைவர் ஸ்டாலின் ஒப்புதலோடு நடத்து வோம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் திமுக தெற்கு மாநிலத்தின் சார்பில் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி பொறுப்பாளர் சபாபதி மோகன் பங்கேற்று, "மீண்டும் புதுச்சேரியில் திமுக ஆட்சியமைக்கும். எதிர் காலம் எங்கள் கையில்" என்று குறிப்பிட்டார்.

திமுக ஏற்பாடு செய்திருந்த இக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் பங்கேற்கவில்லை. சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர். காங்கிர ஸுக்கு திமுக முறைப்படி அழைப்பு தராததால் பங்கேற்கவில்லை என்று அக்கட்சி தரப்பில் தெரிவிக் கின்றனர். இதன் மூலம் காங்கி ரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை திமுக எடுக்கத் தொடங்கியுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தொண் டர்கள் தரப்பில் விசாரித்தபோது, " புதுச்சேரியில் திமுக வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக அமைப்பாளர்கள் உள்ளனர். ஆளுநருக்கு எதிராக தெற்கு மாநிலம் நடத்திய போராட் டத்தில் வடக்கு மாநில அமைப்பா ளர் எஸ்பி சிவக்குமாரே பங்கேற்க வில்லை. அவர் ஆளுநரை கண் டித்து அறிக்கை மட்டும் விடுத்தார். இப்படி கோஷ்டிபூசல் இருக்க, திமுக எப்படி ஆட்சியமைக்க முடி யும்?" என்று கேள்வி எழுப்பு கின்றனர்.

புதுச்சேரியில் மூன்று முறை திமுக ஆட்சியில் இருந்துள் ளது. 1996-ம் ஆண்டு கடைசியாக திமுக ஆட்சியில் இருந்தது. 2001 மற்றும் 2007-ல் 7 திமுக எம்எல்ஏக்கள் இருந்தனர். பின்னர் சரிந்து 2011-ல் திமுகவில் இரு எம்எல்ஏக்கள் மட் டுமே இருந்தனர். தற்போது இடைத் தேர்தலிலும் வென்றதன் மூலம் திமுக எம்எல்ஏக்களின் எண் ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x