

போலி முகவரியை பயன்படுத்தி சிம்கார்டு வாங்கிய வழக்கில் மாவோயிஸ்ட் ரூபேஷ் சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் ரூபேஷ் அவரது மனைவி உள்பட 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இடையன்வயல் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது முகவரியைப் பயன்படுத்தி போலியாக சிம்கார்டு வாங்கிய வழக்கின் விசாரணை சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்காக இன்று கேரள சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரூபேஷ் சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் இம்மாதம் 26-ம் தேதி ரூபேஷை மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.