Published : 10 Jul 2019 08:44 PM
Last Updated : 10 Jul 2019 08:44 PM

குரூப்.4 தேர்வு 6491 பணியிடங்களுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 6491 இடங்களுக்கான குரூப்.4  தேர்வெழுத 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2018-2019. 2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கான குரூப்- 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு அமைச்சுகப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சப்பணி, தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப்பணி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப்பணிகள் என குரூப்-4 நேரடியாக நடத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிட விவரம் கிராம நிர்வாகம் 397 காலி பணியிடங்கள் இளநிலை உதவியாளர்  2688 காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர் (பிணையம்) 104 காலி பணியிடங்கள், வரி தண்டலர்- நிலை -139 காலி பணியிடங்கள், நில அளவையாளர் 509 காலி பணியிடங்கள், வரைவாளர் 74 காலி பணியிடங்கள் தட்டச்சர் 1901 பணியிடங்கள் சுருக்கெழுத்து தட்டச்சர் 784 பணியிடங்கள், சுருக்கெத்து தட்டச்சர்  784 பணியிடங்கள் மொத்தம் 6491 பணியிடங்களுக்கான தேர்வு நடக்கிறது.

அடிப்படை ஊதியம் ரூ.19500 லிருந்து ரூ.62000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.20800 லிருந்து ரூ.65500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஜுலை 14 கடைசி நாள். காலிப்பணியிட விவரங்கள் தோராயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

6,491 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு எழுத இன்று வரை 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. செப்டம்பர் 1-ல் நடக்கும் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 14 ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x