Published : 12 Jul 2019 07:43 AM
Last Updated : 12 Jul 2019 07:43 AM

நாட்டிலேயே முதன்முறையாக ஹூண்டாய் எலக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம்: பேரவையில் அமைச்சர் சம்பத் தகவல்

நாட்டிலேயே முதன்முறையாக ஹூண்டாய் நிறுவனம் எலக்ட்ரிக் கார் தயாரிக்கிறது. இந்த காரை முதல்வர் பழனிசாமி விரைவில் அறிமுகம் செய்து வைப்பார் என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந் தது. விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் எம்.சி.சம்பத் பேசிய தாவது:

முன்னாள் முதல்வர் ஜெயல லிதா எடுத்த முயற்சியின் காரண மாக தமிழ்நாடு ஆட்டோமொபைல் தொழிற்சாலை கேந்திரமாக மாறி யுள்ளது. ஆண்டுக்கு 16 லட்சம் நான்கு சக்கர வாகனங்களும், 40 லட்சம் இருசக்கர வாகனங்களும், 2 லட்சம் கனரக வாகனங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. நிமிடத்துக்கு ஒரு மோட்டார் வாக னம் தயாரிக்கப்படுகிறது.

பாக்ஸ்கான், பிளக்ஸ்ட்ரா னிக்ஸ் நிறுவனங்கள் 33 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி யுள்ளது. 11 புதிய தொழில் பூங் காக்களையும், 5 உணவுப் பூங்காக் களையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வர்த்தக மையத்தில், 20,804 சதுர அடியில் ரூ.289 கோடி செலவில் 4,060 பேர் அமரக்கூடிய வகையில் மிகப்பெரிய வர்த்தக அரங்கம் உலகத் தரத்தில் கட்டப் பட உள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக ஹூண்டாய் நிறுவனம் எலக்ட்ரிக் கார் (இ-வாகனம்) உற்பத்தி செய்கிறது. இந்த காரை முதல்வர் பழனிசாமி விரைவில் அறிமுகம் செய்து வைப்பார்.

கடலூர் சிப்காட் தொழில் பூங்காவில் தினமும் 20 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க ரூ.1 கோடியே 75 லட்சத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

சிப்காட் தொழில் பூங்காக்களை இயற்கை எழில்மிகு தொழில் பூங்காக்களாக மேம்படுத்த ரூ.20 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். சிப்காட் தொழில் பூங்காக்களில் 2 லட்சத்து 32 ஆயிரம் மரக்கன்றுகள் ரூ.9 கோடியே 65 லட்சத்தில் நடப்படும்.

சிப்காட் நிறுவனத்துக்கான இணையவழி ஒருங்கிணைந்த மென்பொருள் சேவை ரூ.1 கோடியே 50 லட்சத்தில் உருவாக் கப்படும். சென்னை டைடல் பார்க்கில் ரூ.4 கோடியே 65 லட்சத்தில் தொழில்முனைவோர் துவக்கி மையம் (Tidel Start-up Hub) அமைக்கப்படும். தமிழ் நாடு உப்பு நிறுவனத்தின் உப்பு உற்பத்தியை மேம்படுத்த ரூ.20 லட்சத்தில் ஆய்வு மேற்கொள்ளப் படும்.

இவ்வாறு அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x