Published : 08 Jul 2019 09:52 PM
Last Updated : 08 Jul 2019 09:52 PM

சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் நடத்தும் லோன் மேளா: 5 இடங்கள் அறிவிப்பு

சிறுபான்மையினரில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் வகையில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தொழில் மேம்பாட்டுக்குக் கடன் வழங்கப்படுகிறது. சென்னையில் லோன் மேளா நடக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு:   

“தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் ஓவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டைச் சார்ந்த சிறுபான்மையினர்களுக்கு சுமார் ரூ.35 கோடி அளவில் கடன் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2017-18 ஆம் ஆண்டில் இக்கழகத்தின் கடன் திட்டங்களின் கீழ் ரூ.34.65 கோடி 6,847 சிறுபான்மையினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சென்னை மாவட்டத்திற்கு ரூ.3 கோடி அளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்படவுள்ளன.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, மற்றும் ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் சென்னை மாவட்டத்தில் கீழ்கண்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் நடைப்பெறவுள்ளது.

வட்டாட்சியர் அலுவலகம் – நடைபெறும் நாள்

1 எழும்பூர் 09.07.2019

2 புரசைவாக்கம் 12.07.2019

3 கிண்டி 16.07.2019

4 வேளச்சேரி 18.07.2019

5 சோளிங்கநல்லூர் 23.07.2019

திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 1-இன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 ரூ வட்டி விகிதத்திலும்(.50 பைசா), திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8ரூ(.66 பைசா) / பெண்களுக்கு 6ரூ(.50 பைசா) வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது.

சுயஉதவிக் குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.50,000/- ஆண்டிற்கு 7ரூ(.58 பைசா) வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ / மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை /முதுகலை தொழிற்கல்வி/ தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையிலும், திட்டம் 2-இன் கீழ் ரூ.30,00,000/- வரையிலும் 3ரூ(.25 பைசா) வட்டி விகிதத்திலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே, சென்னை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) மேற்படி சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, உணவுப் பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide certificate), கல்விக் கட்டணங்கள் செலுத்தியரசீது / சலான் (origina) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு அனைத்து சிறுபான்மையினர்களும் கடன் உதவி பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x