8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் மீது அரசு திணிக்கக் கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்

8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் மீது அரசு திணிக்கக் கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்
Updated on
1 min read

மத்திய அரசின் 8 வழிச்சாலை திட்டம் மக்களுக்கு ஏற்புடையதா? என்று கேட்டறிந்து அமல்படுத்த வேண்டுமே தவிர அதை மக்களிடத்தில் திணிக்கக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், "மத்திய அரசின் 8 வழிச்சாலை திட்டம் மக்களுக்கு ஏற்புடையதா? என்று கேட்டறிந்து அமல்படுத்த வேண்டுமே தவிர மக்களிடத்தில் அதனை திணிக்கக் கூடாது.

இந்தத் திட்டத்தை ஒட்டுமொத்த தமிழகமே எதிர்க்கிறது. மக்கள் எதிர்க்கும் திட்டத்தை தமிழக முதல்வரும் எதிர்த்து மக்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்" என்றார்.

மேலும் பேசும்போது, "அதிமுக ஆட்சியில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஆணவப் படுகொலைகள் நடைபெறுகின்றன.

சாதிய, மதவாத கட்சிகளால் ஆணவக் கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இதனைத் தடுப்பதற்குரிய முயற்சியில் அரசு ஈடுபடவது அவசியம்.

ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு மத்திய அரசிடம், தமிழக முதல்வரும் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்" என்றுவேண்டுகோள் விடுத்தார்.

மேலும், தமிழக அரசு சுதந்திரமாக செயல்டாமல், மத்திய அரசுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைத்துழைத்துப் போக வேண்டிய கட்டாயத்தில் சிக்கித் தவிக்கிறது என்று திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in