

பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியையொட்டி, உறுப்பினர் சேர்க்கை இயக்க வாகனத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 118-வது பிறந்த தினத்தில் இந்தியா முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பங்கேற்று உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை blsfS தொடங்கி வைத்தார். மேலும் பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்க வாகனத்தை கொடி அசைத்து அவர் தொடங்கி வைத்தார்.
பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நாடுமுழுவதும் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.