Published : 03 Jul 2019 07:48 AM
Last Updated : 03 Jul 2019 07:48 AM

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரி வினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக கொண்டுவரப் பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த ஜூன் 5-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனாலும் இது வரை எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை. இதில் சதி இருப்பதாக கருதுகிறோம். எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் பொரு ளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி னால் 25 சதவீத இடங்களை கூடுதலாக தருவதாக மத்திய அரசு ஏமாற்ற நினைக் கிறது. 25 சதவீத கூடுதல் இடம் என்பது மெள்ள கொல்லும் விஷம் போன்றது. கொடிய விஷம் கொண்ட பாம்பை நல்ல பாம்பு என்று அழைப்பதற்கு ஒப்பானது. எனவே, இந்த மயக்கத்திலும், கவர்ச்சியிலும் அதிமுக அரசு மனதைப் பறிகொடுத்துவிடக் கூடாது.

‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என ஜெயலலிதாவை பாராட்டுகிறோம். அவ ரது அடிச்சுவட்டில் ஆட்சி நடத்துவதாக கூறும் முதல்வர் பழனிசாமி அரசு, 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்கக் கூடாது. 10 சதவீத இடஒதுக்கீடு என்பது பிற்படுத்தப் பட்டோரின் இடஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்யும் திட்டமிட்ட நடவடிக்கை. இதுபற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின் பேசிய கருத்தை வலியுறுத்தி ஜே.ஜி. பிரின்ஸ் (காங்கிரஸ்), அபூபக்கர் (முஸ்லிம் லீக்) ஆகியோர் பேசினர். அவர் களுக்கு பதிலளித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:

69 சதவீத இடஒதுக்கீட்டில் அதிமுக அரசு எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக் காது. அதில் மிகமிக உறுதியாக இருக் கிறோம். பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத ஒதுக்கீட்டை எம்பிபிஎஸ் சேர்க்கையில் நடைமுறைப்படுத்தினால் 25 சதவீத கூடுதல் இடங்கள் வழங்கப்படும் என இந்திய மருத்துவக் கவுன்சில் மாநில அரசு களுக்கு கடிதம் எழுதியிருந்தது.

அதனை தமிழகம், கர்நாடகம் தவிர மற்ற மாநிலங் கள் ஏற்றுக் கொண்டுள்ளன. 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டால் தமிழகத்துக்கு 1,000 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக கிடைக்கும். அதில் மத்திய ஒதுக்கீட்டுக்கு 150 இடங்கள் போக மீத முள்ள 850 இடங்கள் தமிழகத்துக்கு கிடைக்கும். அதில் பொதுப்பிரிவுக்கு 264 இடங்கள் போக 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு 586 இடங்கள் கிடைக்கும்.

இதற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த 5 ஆண்டுகள் வரை சலுகை வழங்கப் படும் என இந்திய மருத்துவக் கவுன்சில் கூறியுள்ளதை பேரவைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதுகுறித்து அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகள், சட்ட வல்லுநர் கள், கல்வியாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

முதல்வர் பழனிசாமி: 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்றால் என்னென்ன கிடைக் கும் என மத்திய அரசு கடிதத்தில் கூறியதை அமைச்சர் இங்கே தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

திமுக உறுப்பினர் க.பொன்முடி: கர்நாடகம், தமிழகம் தவிர மற்ற மாநிலங் கள் ஏற்றுக் கொண்டு விட்டன என அமைச் சர் சொல்வது நாங்களும் ஏற்றுக் கொள் வோம் என்பதைப் போல உள்ளது. 10 சதவீத ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டால் கூடுதல் இடங்களைத் தருவோம் என மத்திய அரசு கூறுவது நம்மை மிரட்டுவது போல உள்ளது. நாம் கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களைக் கேட்டுப் பெற வேண்டும்.

முதல்வர் பழனிசாமி: 10 சதவீத ஒதுக்கீட்டை அதிமுக அரசு ஏற்றுக் கொண்டதைப் போல பொன்முடி பேசுவது தவறு. இதுதொடர்பாக மத்திய அரசு எழுதிய கடிதத்தின் விவரங்களை இங்கே எடுத்துக் கூறினோம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் விவாதித்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் இதில் முடிவு எடுக்கப்படும். 69 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: 10 சதவீத ஒதுக்கீடு விவகாரத்தில் நாம் ஒரே பாதையில் பயணித்து வருகிறோம். எந்தச் சூழலிலும் 69 சதவீத ஒதுக்கீட்டை அதிமுக அரசு நடைமுறைப்படுத்தும்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: தமிழக அரசு இந்த ஆண்டு 350 எம்பிபிஎஸ் இடங் களை கூடுதலாகப் பெற்றுள்ளது. 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து ஜூன் 28-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு இந்திய மருத் துவக் கவுன்சில் கூறியது. ஆனாலும் தமிழகம் இன்னமும் முடிவு அறிவிக்க வில்லை. 69 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக அரசு நிச்சயம் பாதுகாக்கும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x