

மார்பகப் புற்று நோய் குறித்த விழிப்புணர்வுக்காக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மாரத்தான் போட்டியில் 6 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
மியாட் தனியார் மருத்துவமனை மற்றும் ஸ்டேட் பாங் ஆப் இந்தியா ஆகியவை பிங்கத்தான் மையத்துடன் இணைந்து இந்த மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
சென்னை தீவுத்திடலில் இருந்து காலை 6 மணிக்கு இந்த மாரத்தான் புறப்பட்டு மீண்டும் அங்கேயே முடிவடைந்தது.
3, 5 மற்றும் 10 கிலோமீட்டர் தூரம் கொண்ட மூன்று பிரிவு களில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதில் கல்லூரி மாணவிகள், எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் உட்பட 6 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
மாரத்தான் போட்டியைத் துவக்கி வைத்துப் பேசிய மியாட் மருத்துவமனையின் துணை மேலாளர் பிருத்வி மோகன்தாஸ், “பெண்களிடம் தற்போது அதிகரித்து வரும் மார்பகப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வுக்காக இந்தப் போட்டி நடைபெறுகிறது.
மார்பகப் புற்று நோய் தாக்கியவர்கள் ஆரம்ப நிலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் சரி செய்துவிடலாம். மார்பகப் புற்று நோயை குணப்படுத்த முடியும்” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சென்னை வட்டப் பொது மேலாளர் கீர்த்திவாசன், “ இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் புதியதாக மார்பாகப் புற்று நோயால் பாதிக்கப்படு கின்றனர்” என்றார்.