

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 38 தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பலமுனை போட்டியில் திமுக 37 இடங்களில் வென்றது.
அதிமுக ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேனி தொகுதியில் ரவீந்திரநாத்தை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிட்டார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
இந்தத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் வழங்கப்பட்டதாக ஆரம்பம் முதல் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர் இந்நிலையில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி அனைவரும் பதவி ஏற்ற நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது அதை ரத்து செய்ய வேண்டும் என்று வாக்காளர் ஒருவர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தேனியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் இந்த தேர்தல் வாழ்க்கை தொடர்ந்துள்ளார். அவரது கோரிக்கை மனுவில், "வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா விவகாரத்தில் தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
ஆனால் அதே குற்றச்சாட்டை வைக்கப்பட்ட தேனி தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படவில்லை. இந்த தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அதிக அளவில் அடங்கியுள்ளது ஆகவே தொகுதியில் வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்" என கோரியுள்ளார். இந்த வழக்கு பட்டியலிடப்பட்டு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது .