

பாண்டிய மன்னனை போல் மதுரையை காக்க முதல்வர் பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் பல்வேறு வகையான குடி மராமத்துப் பணிகளைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய அவர், ''மதுரை மாநகரின் தொன்மையைக் காத்து, அதன் வரலாற்றுப் பெருமைகளைப் போற்றும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். மதுரைக்கு அவர் அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
பாண்டிய மன்னன் எப்படி மதுரையைக் காக்க என்னென்ன நடவடிக்கை எடுத்தாரோ, அதைப் போன்ற நடவடிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எடுத்திருக்கிறார். அதற்காக மதுரை மக்கள் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். உங்கள் மூலம், நான் அந்த நன்றியைச் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்'' என்றார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
தமிழகம் முழுவதும் நீராதாரங்கள் வற்றிவிட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் குடி மராமத்துப் பணிகளும், ஏரி, குளங்களைத் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.