

எதிர்வரும் காலத்தில் அதிமுகவும் வெற்றி பெறும், இந்திய அணியும் வெற்றி பெறும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நீட் பிரச்சினையில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் செய்த தவற்றை சட்டப்பேரவையில் முதல்வர், சட்ட அமைச்சர் உள்ளிட்டோர் தோலுரித்துக் காட்டினர். தமிழகத்தின் பல்வேறு உரிமைகளையும் அடகுவைத்தது திமுகவே.
கச்சத்தீவாக ஆகட்டும் காவிரி நீர் ஆகட்டும் எல்லா சர்ச்சைகளிலும் அதிமுக தலையிட்டு உரிமையை மீட்பதே அதிமுகவின் இலக்கு.
தமிழக உரிமைகளை உரிமைகளை நிலைநாட்டும் கட்சி அதிமுக ஆட்சியே. அரசியலிலும், கிரிக்கெட்டிலும் வெற்றி, தோல்வி சகஜமே.
எப்படி அதிமுக அரசு மக்களவைத் தேர்தலில் தற்காலிக தோல்வியை சந்தித்ததோ அதேபோல்தான் இந்திய அணி கிரிக்கெட்டில் தோல்வியுற்றுள்ளதும். எதிர்வரும் காலத்தில் அதிமுகவும் வெற்றி பெறும், இந்திய அணியும் வெற்றி பெறும்" என்றார்.