

செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் வனப் பகுதியில் மீண்டும் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால், அதைப்பிடிக்க சேதமடைந்த கூண்டுகளை வனத்துறையினர் சீரமைத்து வருகின்றனர்.
செங்கல்பட்டு வனப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வருகிறது.
இதை கண்காணிக்க நவீன கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் சிறுத்தையின் நட மாட்டமும் பதிவாகியுள்ளது. சில மாதங்களாக வனப் பகுதியினுள் இருந்த இச்சிறுத்தைப்புலி, கடந்த சில தினங்களாக அஞ்சூர் வனப் பகுதியில், பொதுமக்கள் குடி யிருக்கும் பகுதிக்கு அருகில் நடமாடுவது உறுதி செய்யப் பட்டுள்ளது.
இதனால் வனப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த வர்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து செங்கல்பட்டு வனச் சரகர் கோபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
அஞ்சூர் வனப் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப் பது ஏற்கெனவே உறுதி செய்யப் பட்டதுதான். அதனால், வனப் பகுதியினுள் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. செல்லும் வழிகளும் முள்செடிகளைக் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன. சிறுத் தைப்புலியை பிடிக்க ஏற்கெனவே கூண்டுகள் நீரோடை களின் மறைவான பகுதியில் வைக்கப்பட்டிருந்தன. தற்போது கன மழை பெய்ததையடுத்து, மழை நீரால், கூண்டுகள் சேத மடைந்திருந்தது தெரியவந்தது. கடந்த சில தினங்களாக அதைச் சீரமைத்து வருகிறோம்” என்றார் அவர்.