Published : 11 Jul 2019 06:05 PM
Last Updated : 11 Jul 2019 06:05 PM

குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வு தேதி- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழநாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் முதன்மை எழுத்துத்தேர்வு வரும் ஜூலை 12,13,14 தேதிகளில் சென்னையில் 95 மையங்களில் நடத்தப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:

“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி)  ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்-1 பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Examination)  வருகின்ற 12.07.2019,13.07.2019 மற்றும் 14.07.2019 ஆகிய நாட்களில் முற்பகல் மட்டும் சென்னை தேர்வு மையத்தில் உள்ள 95 தேர்வுக்கூடங்களில் நடைபெற உள்ளது.        

இத்தேர்விற்கென முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ள 9441 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணைய இணையதளங்களான www.tnpscexams.in  மற்றும் www.tnpscexams.net -ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு தேர்வு அறையில் பத்து தேர்வர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு தேர்வுக் கூடங்களிலும் தீவிர கண்காணிப்பிற்கென காவலர் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு தேர்வுக் கூடத்திற்கு ஒரு முதன்மைக் கண்காணிப்பாளர் வீதம் 95 முதன்மைக் கண்காணிப்பாளர்களும் மற்றும் பத்து தேர்வர்களுக்கு ஒரு அறைக் கண்காணிப்பாளர் வீதம் 945 கண்காணிப்பாளர்களும் பணியில் ஈடுபடவுள்ளனர். அனைத்துத் தேர்வுக்கூடங்களையும் கண்காணிக்கும் வகையில் அதிகாரிகள் நிலையிலான 15 பறக்கும்படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

 இத்தேர்வு நடைபெறும் தேர்வுக்கூடங்களில் அலைபேசி தொடர்புகளை / சமிக்ஞைகளைத் தடைசெய்யும் ஜாமர் கருவிகள் முதன்முறையாக இத்தேர்வில் பயன்படுத்தப்படவுள்ளன” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x