

தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக தனியார் தண்ணீர் லாரி சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தண்ணீர் எடுக்க இடம் இல்லை என்பதாலும், கிடைக்கும் இடங்களில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு கிளம்புவதாலும் வாகனங்களை இயக்குவதை நாளை (08.08.2019) முதல் நிறுத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
பல மாவட்டங்களில் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்படுவதாகவும் அச்சங்கம் குற்றம்சாட்டி இருந்தது. இதையடுத்து அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் தண்ணீர் லாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாக அரசு உறுதியளித்ததால் நாளை தொடங்கவிருந்த தண்ணீர் லாரி வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறப்படுவதாக தனியார் தண்ணீர் லாரி சங்கம் அறிவித்துள்ளது.