Published : 08 Jul 2019 11:05 AM
Last Updated : 08 Jul 2019 11:05 AM

உதயநிதி நியமனம்: திமுக தொண்டர்களுக்கு கவலை அளிக்கிறது; தமிழிசை விமர்சனம்

மன்னர் வழி போல திமுகவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தலைமைப் பொறுப்புக்கு வருவதாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதற்கு, திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிலையில், திமுகவில் சாதாரண தொண்டர் தலைமைப் பொறுப்புக்கு வர முடியாது என, தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) சென்னை ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"சாதாரண உறுப்பினராக கட்சியில் சேர்ந்து தலைவராக உயரும் வாய்ப்பு திமுகவில் கிடையாது. திமுகவில் நான்காம் கலைஞர், ஐந்தாம் கலைஞர், ஆறாம் கலைஞர் என்று வரிசையாக போய்க்கொண்டிருக்கிறது. மன்னர் காலத்தில், ஹென்றி 1, ஹென்றி 2 என்ற வரிசையில் தான் இருக்கும். அவை மன்னர் வழி வருகின்ற ஆட்சி. அதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இன்றைக்கு ஜனநாயக ரீதியிலான கட்சியில் கூட இப்படிப்பட்ட நிகழ்வுகள் தான் நடக்கின்றன என்பது, எனக்கு அல்ல, திமுக தொண்டர்களுக்கு கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது", என தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x