Published : 11 Jul 2019 07:57 AM
Last Updated : 11 Jul 2019 07:57 AM

மூன்றாம் பாலினத்தவருக்கு மாநில விருது; 2,167 சத்துணவு மையங்கள் பழுது பார்க்கப்படும்: சமூக நல அமைச்சர் சரோஜா அறிவிப்பு 

தமிழ்நாட்டில் 2,167 சத்துணவு மையங்கள் ரூ.2 கோடியில் பழுது பார்க்கப்படும். சிறந்த முன்மாதிரி யாகத் திகழும் மூன்றாம் பாலினத் தவருக்கு மாநில விருது வழங்கப் படும் என்று சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்தும், அறிவிப்புகள் வெளியிட் டும் அமைச்சர் டாக்டர் வி.சரோஜா பேசியதாவது:

தமிழ்நாட்டில் 43 ஆயிரத்து 283 சத்துணவு மையங்களில் 49 லட் சம் பயனாளிகளுக்கு 13 வகை கலவை சாதனங்கள், வாரம் 5 முட்டைகளுடன் வழங்கப்படுகி றது. முதல்கட்டமாக, சத்துணவு மையங்கள் கட்டப்பட்டு 10 ஆண்டு கள் முடிவடைந்த 2 ஆயிரத்து 167 மையங்கள் ரூ.2 கோடியே 16 லட்சம் செலவில் பழுதுபார்க் கப்படும். மூன்றாம் பாலினத்தவர் களுக்கென ரூ.10 லட்சத்தில் ஒரு தனி செயலி உருவாக்கப்படும்.

மூன்றாம் பாலினத்தவர்களில் சிறந்த முன்மாதிரியாகத் திக ழும் ஒருவருக்கு ஆண்டுதோறும் மாநில விருது வழங்கப்படும். இவ் விருது பெறும் சாதனையாளருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், விருதும் வழங்கப்படும். 1,137 அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்தில் குடிநீர் வசதி செய்து தரப்படும்.

1,282 அங்கன்வாடி மையங் களுக்கு ரூ.1 கோடியே 54 லட்சத் தில் குழந்தை நேய கழிப்பிடம் (Baby Friendly Toilet) கட்டித் தரப்படும்.

இளைஞர் நீதிச் சட்டத்தின் கீழ் கையாளப்படும் குழந்தைகளின் பாதுகாப்பு, வளர்ச்சியைக் கண் காணிப்பது, மறுவாழ்வு குறித்த விவரங்கள் ஆகியன குழந்தை களைக் கையாளும் அனைத்து தரப்பு அலுவலர்கள் மற்றும் அமைப்புகள் அறிவதற்கு, குழந் தைகள் குறித்த தரவுகளை ஒருங் கிணைக்க முடியும் என்பதால் குழந்தை தகவல் அமைப்பு மென் பொருள் ரூ.65 லட்சத்தில் உருவாக்கப்படும்.

14 வயதுக்கு மேற்பட்ட 920 மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி களுக்காக ரூ.2 கோடியே 55 லட் சத்தில் கூடுதலாக தொழிற்பயிற்சி யுடன் கூடிய 23 பராமரிப்பு இல்லங் கள், மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2 கோடியே 68 லட்சத்தில் கூடுத லாக 22 பராமரிப்பு இல்லங்கள் தொடங்கப்படும். மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட 500 மாற் றுத் திறனாளி குழந்தைகளுக்கு ரூ.15 லட்சத்தில் சிறப்பு நாற் காலிகள் வழங்கப்படும் என்றார்.

சமூக நலத்துறை மானிய கோரிக்கை மீது, திமுக உறுப்பினர் பி.கே.சேகர்பாபு பேசும்போது, ‘‘கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு மாற்றுத்திறனாளிகள் சட்டம் கொண்டு வந்தது. ஏற் கெனவே 2011-ம் ஆண்டு கணக்குப் படி 11 லட்சத்து 78,693 பேர் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக கூறப்பட்டது. இது 7 வகையான அங்கம் குறைபாடுகள் உடையவர் கள் கணக்கு.

2016-ம் ஆண்டு சட்டத்தில், 21 அங்க குறைபாடுகள் உடைய வர்களை மாற்றுத்திறனாளிகளாக பாவிக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது. முதல்வர் கூட 2018-ம் ஆண்டு அதற்கான சட்ட முன் வடிவை கொண்டு வந்தார். ஆனால், இதுவரை 21 அங்க குறைபாடு உடையவர்கள் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மத்திய அரசு சட்டத்தை பயன்படுத்தி கணக் கெடுத்திருந்தால் 30 லட்சம் பேர் இணைந்திருப்பார்கள். அதன்மூலம் அவர்கள் வாழ்வு வெளிச்சத்துக்கு வந்திருக்கும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் வி.சரோஜா பேசும்போது, ‘‘மாற்றுத் திறனாளிகள் நலச்சட்டம் அமல் படுத்தப்பட்ட பின், மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி தமிழகத் தில் 11 லட்சத்து 79 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் இருப்பதாக கணக் கிடப்பட்டது.

13 லட்சம் மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகள் துறை வழியாக, அந்த சட்டத்தில் சொல்லப் பட்ட ஷரத்துக்கள் அடிப்படை யில், மாற்றுத்திறனாளிகள் ஒவ் வொரு மாவட்டமாக, வீடுவாரி யாகச் சென்று கணக்கெடுத்து, எத்தனை மாற்றுத்திறனாளிகள், எந்த வகையில் அவர்கள் மாற்றுத் திறனாளிகள், எவ்வளவு சதவீதம் குறைபாடு உள்ளது என்பது கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இதுவரை 13 லட்சத்து 50 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப் பட்டுள்ளது. தொடர்ந்து இந்த கணக்கெடுப்பை முழுமையாக செய்ய அரசு நடவடிக்கை எடுத் துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x