Published : 10 Jul 2019 09:47 AM
Last Updated : 10 Jul 2019 09:47 AM

நன்கொடையாளர்கள் மீது வீண் பழி சுமத்தி கோயில் திருப்பணிகளைத் தடுக்க தீய சக்திகள் சதி செய்கின்றன: சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் மடாதிபதிகள் குற்றச்சாட்டு

நன்கொடையாளர்கள் மீது வீண் பழி சுமத்தி கோயில் திருப்பணி களைத் தடுக்க தீய சக்திகள் சதி செய்வதாக மடாதிபதிகள் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக வடலூர் ஊரன் அடிகளார், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி கள், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், திருவலம் சர்வமங்க ளாபீடம் சாந்தா சுவாமிகள், திண் டுக்கல் சிவபுர ஆதீனம் திருநாவுக் கரசு சுவாமிகள் உள்ளிட்ட 10 மடாதிபதிகள் சென்னை மயிலாப் பூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறிய தாவது:

இந்து சமய அறநிலையத் துறை யின் கடந்தகால தவறான செயல் பாடுகளால் சிலைகள் திருட்டு, சிலைகள் மாற்றம் போன்ற பல குற்றங்கள் நடந்துள்ளன. அதுபற்றி விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு காவல் பிரிவு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் திருப்பணி கள் செய்ய பல செல்வந்தர்கள், பொருள் வளம் படைத்தவர்கள் முன்வருகின்றனர். ஆனால், அவர் களுக்கு உரிய மரியாதை அளிக்கப் படுவது இல்லை. அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தான் அறநிலையத் துறையின் செயல்பாடுகள் இருக்கின்றன.

கடந்த சில மாதங்களாக, இது போல நன்கொடை அளிப்பவர்கள் மீது சிலை திருட்டு உள்ளிட்ட பல முறையற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

தவறு செய்பவர்கள் தண்டிக் கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம், விசாரணையை ரகசியமாக நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வெளியிடுவதுதான் முறை.

குற்றம் உறுதி செய்யப்படாத நிலையில், விசாரணை நிலுவை யில் இருக்கும்போதே, நன்கொடை யாளர்களின் புகழுக்கும், பெயருக் கும் களங்கம் ஏற்படும் வகையில் காவல் துறை செயல்படக் கூடாது.

நன்கொடையாளர்கள் அச்சம்

‘இனியும் நாங்கள் கோயில் திருப் பணி செய்ய முன்வர வேண்டுமா?’ என்று பல நன்கொடையாளர்களும் வெளிப்படையாகவே எங்களி டம் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால், ஆலயத் திருப் பணிகளுக்கு நன்கொடையாளர் கள் வருவது குறைந்து வருகிறது.

கோயில்களுக்கு திருப்பணி செய்பவர்கள் மீது பாதகமான பல பழிகளைப் போட்டு, அவர் களை மனமுடைந்து பாதிக்கப்படச் செய்து, ஆலயத் திருப்பணிகளை விட்டே அவர்களை வெளியேற்றி விட வேண்டும் என்ற சதித் திட்டத் தோடு தீய சக்திகள் செயல்படு கின்றன. அவர்களை பொதுமக் களும், அதிகாரிகளும், காவல் துறையும் அடையாளம் காண வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x