Published : 13 Jul 2019 09:20 PM
Last Updated : 13 Jul 2019 09:20 PM

தீவிரவாத அமைப்பை துவக்கி தாக்குதல் நடத்த திட்டம்: சென்னை உட்பட 4 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை: 3 பேரிடம் விசாரணை; ஆவணங்கள், கருவிகள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கையின்பேரில், சென்னை மற்றும் நாகப்பட்டினம் உட்பட 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.

மத்திய உளவுத்துறை அளித்த ரகசிய தகவல் அடிப்படையில் தமிழகத்தில் ‘அன்சருல்லா’ என்கிற அமைப்பை ஆரம்பித்து ரகசியமாக இயங்கி வருவதாக என்.ஐ,ஏ அமைப்பு கடந்த 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. அன்சருல்லா என்ற அமைப்பு மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு தீவிரவாத சக்திகளுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக பெரும் தாக்குதலை நடத்துவது திட்டம். இதற்காக தமிழகத்தில் அன்சருல்லா அமைப்பின்மூலம் நிதி திரட்டுவது, இந்திய அரசுக்கு எதிராக இயங்கும் செயல்களை செய்து வந்துள்ளனர்.

இந்திய அரசுக்கு எதிராக செயல்பட இந்த அமைப்பு நிதி திரட்டி, தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக என்ஐஏ அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை தமிழகத்தில்  நான்கு இடங்களில் திடீர் சோதனையில் என்.ஐ.ஏ அமைப்பு ஈடுபட்டது.

என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னை மண்ணடியில் இயங்கும் அமைப்பின் நிர்வாகி செய்யது புகாரி என்பவரின் மண்ணடி மற்றும் புரசைவாக்கம் வீடு,  கெல்லீஸில் உள்ள அசன் அலி யூசுப் மரைக்காயர் வீடு/ அலுவலங்களில் சோதனை நடத்தினர். நாகை, மஞ்சக்கொல்லையில் உள்ள முகமது யூசுப்புத்தீன் ஹரிஷ் முகமது வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.

சோதனையின் முடிவில் 9-செல்போன்கள், 15- சிம் கார்டுகள், 7- மெமரி கார்டுகள், 3 லாப்டாப், 5 ஹார்ட் டிஸ்க், 6-பென்டிரைவ்கள், 2 டேப்லெட்டுகள், 3 சிடிக்கள், வங்கி கணக்கு விவரங்கள், பணப்பரிமாற்ற ஆவணங்கள், இதழ்கள், பேனர்கள், நோட்டீஸ்கள், புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது.

மூன்றுபேர்மீதும் IPC - 120B, 121A and 122 besides sections 17, 18, 18-B, 38 and 39 of the UA (P) Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  சோதனையின் முடிவில் மூன்று பேரையும் என்.ஐ.ஏ அமைப்பினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x