

பேட்டி அளிக்கும்போது உள்துறை அமைச்சரை ஒருமையில் பேசி மத்திய-மாநில அரசுகளை விமர்சித்ததாக நடிகர் மன்சூர் அலிகான்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலையில் வசிப்பவர் வி.ஜி.நாராயணன், இந்து அமைப்பு ஒன்றின் நிர்வாகியாக உள்ளார். இவர் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் மன்சூர் அலிகான் மத்திய உள்துறை அமைச்சரை ஒருமையில் பேசியாதாக புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், மன்சூர் அலிகான் நேற்று உத்தமர் காந்தி சாலையில் உள்ள தனது வீட்டில் வைத்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுக்கும் போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கேவலமாக பேசியும், மத்திய உள்துறை அமைச்சரை ஒருமையில் பேசியும், மத்திய மாநில அரசுகளை கேவலமான முறையில் பேசியதாக புகார் மனு கொடுத்துள்ளார்.
புகார் நுங்கம்பாக்க எல்லையில் வருவதால் நுங்கம்பாக்கம் போலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளது.