Last Updated : 10 Jul, 2019 09:49 AM

 

Published : 10 Jul 2019 09:49 AM
Last Updated : 10 Jul 2019 09:49 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் குளறுபடி: 4 மாநில தரவரிசை பட்டியலில் 218 பேர் இடம்பெற்றது அம்பலம்

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 218 பேரின் பெயர்கள், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய வெளி மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 11,741 மாணவர்கள், 19,612 மாணவிகள் என மொத்தம் 31,353 பேர் இடம் பிடித்தனர். இதேபோல், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 9,366 மாணவர்கள், 16,285 மாணவிகள் என மொத்தம்25,651 பேர் இடம் பெற்றனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக் கான தரவரிசைப் பட்டியலில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும்மேற்பட்டோர் இடம்பெற்றிருப் பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதனை சுகாதாரத் துறை அதிகாரிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னைஅண்ணாசாலையில் உள்ள அரசுபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில், தரவரிசைப் பட்டியலில் இருந்த முதல் 10 மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர்சி.விஜயபாஸ்கர் அனுமதி கடிதம்வழங்கினார். அப்போது தமிழக தரவரிசைப் பட்டியலில் வெளிமாநிலங் களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருப்பது அமைச்சர் சி.விஜய பாஸ்கரிடம் கேட்டபோது, “ஒருவர்2 மாநிலங்களில் விண்ணப்பித் தால், அவர் தகுதி நீக்கம் செய்யப்ப டுவார்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் 218 பேர் தமிழகம் உள்ளிட்ட இரண்டு மாநிலங்களில் விண்ணப்பித்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 218 பேரில் 77 பேரின் பெயர்கள் ஆந்திர மாநில தரவரிசைப் பட்டியலிலும், 130 பேரின் பெயர்கள் கர்நாடக மாநில தரவரிசைப் பட்டியலிலும், 12 பேரின் பெயர்கள் தெலங்கானா தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளன.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “வெளிமாநில மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்குவிண்ணப்பிக்க முடியாது. ஆனால்,தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் படிப்பு, வேலை உள்ளிட்ட காரணங்களால் வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தால், அவர்கள் தமிழகத்தில் இருப்பிடச்சான்று பெற்று தமிழகத்தில் மருத்துவப்படிப்புகளுக்கு விண்ணப்பிக் கலாம். இதேபோல் வெளிமாநிலங் களைச் சேர்ந்தவர்கள் படிப்பு,வேலை நிமித்தமாக தமிழகத்தில்5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்கள், தமிழகத்தில் இருப்பிடச்சான்று பெற்று, தமிழகத்தில் மருத்துவப்படிப்புகளுக்கு விண்ணப்பிக் கலாம். ஆனால், ஒருவரே இரண்டு மாநிலங்களில் போலியாக இருப்பிடச் சான்று பெற்று விண் ணப்பிக்கக்கூடாது” என்றனர்.

2017-ல் நடந்தது என்ன?

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரி சைப் பட்டியலில் கேரளா, ஆந்திரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் படித்த மாணவர்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர். போலியான இருப்பிடச் சான்று கொடுத்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்ததாகவும், அவர்களில் 4 பேர் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சுகாதாரத் துறையும், காவல்துறையும் விசாரணை நடத்தியது. ஆனால், உண்மை நிலவரத்தை கடைசி வரை யாரும் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x