Published : 06 Jul 2019 11:49 AM
Last Updated : 06 Jul 2019 11:49 AM

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை என புகார்: உறவினர்கள் போராட்டம்

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை நடப்பதினால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

திருப்பூர், மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(39). இவர் கூலி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி லட்சுமி(25). இவர்களது மூத்த மகள் துளசிமணி(6), அருகில் உள்ள அரசுப்பள்ளியில் 1 -ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், இரண்டாவது குழந்தை பிரசவத்துக்காக கடந்த ஜுன் மாதம் 13-ம் தேதி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர், 14-ம் தேதி லட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதில், அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதில் அறுவை சிகிச்சை தவறாக மேற்கொண்டு சிறுநீர் குழாயை அறுத்து விட்டதாகவும், அதற்கு யூரினல் ட்யூப் இணைக்கப்பட்ட நிலையில் 21 நாட்கள் ஆகிவிட்டது.

இத்தனை நாட்கள் ஆகியும் யூரினல் ட்யூபை அகற்றாமல் இருப்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டதற்கு, யூரினல் ட்யூபை அகற்றினால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு 9 நாட்களில் வீட்டுக்கு அனுப்பும் சூழலில் மருத்துவர்கள் தவறான சிகிச்சை மேற்கொண்டு அதனை மறைப்பதாகவும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மருத்துவமனையில் பாதுகாப்பு பனியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் மருத்துவர்கள் உறவினர்களை சமாதனப்படுத்திய அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர்(பொறுப்பு) சோமசுந்தரம் கூறியதாவது:

"அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் போது சிலருக்கு சிறுநீரக பை சருங்கி விரிந்து கொண்டிருக்கும். மேலும் உள் ரணங்களால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் யூரின் ட்யூப் வைக்கப்படும். உள்ரணம் ஆறிய பின் ஒரு மாதத்தில் யூரினல் ட்யூப் அகற்றப்படும். இது வழக்கமான நடைமுறைதான்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x