

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயத்தை திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என்று பேராயர் எஸ்றா சற்குணம், வங்கி தொழிற்சங்கத் தலைவர் தாமஸ் ஃபிராங்கோ, முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி உள்ளிட்ட 20 சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக திமுக தலை வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று அவர்கள் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மக்கள் இயக்கங்களுடன் இணைந்து நிற்கும் திமுகவின் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயத்தை மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும். மாநிலங்களவை என் பது மூத்தவர்களின், நிபுணர்களின் அவை. தேவசகாயம் 30 ஆண்டு களுக்கும் மேலாக மக்கள் பணியாற்றி வருபவர். இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நண்பர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவர்.
ஜல்லிக்கட்டு இயக்கம், தூத்துக் குடி துப்பாக்கிச் சூடு, சென்னையின் வளர்ச்சிப் பிரச்சினைகள் என மக்களுக்காக, மக்களுடன் நின்று குரல் கொடுத்தவர். சிறந்த ஆட்சி அனுபவம் கொண்டவர். அரசியல் சாசன நிபுணர். பொருளாதாரத்தில் மேதை. ஊடகங்களில் தொடர்ந்து எழுதுபவர்.
எனவே, அவரை மாநிலங் களவை உறுப்பினராக்குவது திமுகவின் பெருமைக்கு மகுடம் சேர்க்கும். இன்றைய அரசியல் சூழ லில் மக்களவையில் தமிழகத்தின் குரல் வலுவாக ஒலிக்க இத்தகைய நிபுணர்கள் தேவை எனக் கருது கிறோம். எனவே, அவரை திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பின ராக்குமாறு பொதுமக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம். இவ் வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியாற்றி வருபவர். சிறந்த ஆட்சி அனுபவம் கொண்டவர். அரசியல் சாசன நிபுணர். பொருளாதாரத்தில் மேதை. ஊடகங்களில் தொடர்ந்து எழுதுபவர்.