கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்; காவல் ஆணையரிடம் புகார்- கராத்தே தியாகராஜனுக்கு கோபண்ணா எச்சரிக்கை

கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்; காவல் ஆணையரிடம் புகார்- கராத்தே தியாகராஜனுக்கு கோபண்ணா எச்சரிக்கை
Updated on
1 min read

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து இப்படியே பேசிவந்தால் கராத்தே தியாகராஜன் நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்டத்தலைவராக பதவி வகித்துவந்த கராத்தே தியாகராஜன், அக்கட்சியிலிருந்து அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து சரமாரியாக விமர்சித்த கராத்தே தியாகராஜன், ''காங்கிரஸ் சொத்தைக் கொள்ளையடித்தவர் கோபண்ணா.

காமராசர் கிரவுண்டில் 500 சதுர அடி இடத்தை வைத்துக்கொண்டு 8 ஆயிரம் சதுர அடி நிலத்தை மடக்கிவைத்துக் கொண்டவர் கோபண்ணா. காமராசரின் பெயரில் புத்தகம் போட்டுக் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். இந்த மாதிரியான ஆட்களை எல்லாம் கட்சிக்குள் வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளேன்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள கோபண்ணா, ''காங்கிரஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்துத்தான் தொழில் நடத்துகிறேன். அதற்காக இதுவரை சுமார் ரூ.65 லட்சம் வரை வாடகை செலுத்தி உள்ளேன். சட்டப்படி அறக்கட்டளையோடு வாடகை ஒப்பந்தம் போட்டுள்ளேன். அதன் அடிப்படையில்தான் எனது தொழில் நடத்தப்படுகிறது.

எந்த சொத்தையும் எப்போதும் நான் கொள்ளை அடித்ததில்லை. என் மீது அவதூறு குற்றச்சாட்டு கூறிய கராத்தே தியாகராஜன் மீது நானும் காவல்துறை ஆணையரிடம் புகார் அளிப்பேன்.

எனது நேர்மை நிரூபிக்கப்பட்ட ஒன்று. விரக்தியின் விளிம்பில் இவ்வாறு அவர் பேசிவருகிறார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து இப்படியே பேசிவந்தால் கராத்தே தியாகராஜன் நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவார்'' என்றார் கோபண்ணா.

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் ஐக்கியமான கதை

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் ஐக்கியமான கதை 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in