ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் மேலும் சிலர் கைதாகலாம்

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் மேலும் சிலர் கைதாகலாம்
Updated on
1 min read

கோவையில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் நடை பெறும் விசாரணையைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் ஆதர வாளர்கள் மேலும் சிலர் கைதாக லாம் எனக் கூறப்படுகிறது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக சில இளைஞர்கள் செயல்படுவதாக வந்த தகவலையடுத்து போத்தனூர் சட்டம் ஒழுங்கு போலீஸார், சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத் தின்கீழ் (உபா) வழக்குப் பதிந்து உக்கடத்தை சேர்ந்த ஷாஜகான், முகமது உசேன், கரும்புக்கடையை சேர்ந்த ஷேக் சபியுல்லா ஆகி யோரை கடந்த 15-ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் தகவல்களை பெற மூன்று பேரையும் 5 நாள் காவலில் எடுத்து கடந்த 27-ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்ற னர்.

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலையில் உள்ள கோவை இளைஞர்கள் குறித்து இவர்களிடம் விசாரித்த போது, சிலரது பெயரை கூறியதாக தெரிகிறது. இதனால் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலை தொடர்பாக மேலும் சிலர் போலீஸாரிடம் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in