8-ம் வகுப்பு முதல் தொடர்ந்து பயில டேராடூன் ராணுவ கல்லூரியில் சேரலாம்: செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

8-ம் வகுப்பு முதல் தொடர்ந்து பயில டேராடூன் ராணுவ கல்லூரியில் சேரலாம்: செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
Updated on
1 min read

டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ம் வகுப்பு சேர்வதற்கான விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவக் கல்லுாரியில், 8-ம் வகுப்பு ஆண்கள் மட்டும் சேர்வதற்கான விண்ணப்பம் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நுழைவு தேர்வு எழுதும் மாணவர் 2.7.2007 முதல் 1.1.2009 தேதிக்கு இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும்.

1.7.2020 அன்று கல்லுாரியில் சேரும் போது, ஏழாம் வகுப்பு பயில்பவராக அல்லது தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். வரும் டிசம்பர் 1-ம் தேதி, காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆங்கிலத் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை கணித தேர்வு நடக்கும். டிசம்பர் 2-ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை பொது அறிவு தேர்வு நடக்கிறது. அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 7.4.2020 நேர்முக தேர்வு நடக்கும். அழைப்பு கடிதம் மார்ச் மாத ஆரம்பத்தில் அனுப்பப்படும்.

தேர்வு செய்யப்படும் மாணவர்கள், ராணுவ மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். புதுச்சேரி மாணவர்களுக்கு, புதுச்சேரியில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.தேர்வு மையம் குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு, தபால் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்ப படிவத்தை பதிவு தபால், விரைவு தபால் மூலம் பெற தெளிவான அஞ்சல் குறியீட்டு எண் உள்ள விலாசம் மற்றும் தொடர்பு எண் கூடிய கோரிக்கை மனுவுடன், பொதுப்பிரிவினர் ரூ.600, அட்டவணை இனத்தவர், பழங்குடியினர் அதற்குண்டான சாதி சான்றிதழுடன் ரூ.555 தொகைக்கு,

'THE COMMANDANT, RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, DEHRADUN. DRAWEE BRANCH, STATE BANK OF INDIA, TEL BHAVAN, DEHRADUN (BANK CODE- 01576) UTTARANKHAND'

என்ற கிளையில் மாற்றக்தக்க வரைவோலையாக (டி.டி)

'THE COMMADANT, RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, DEHRADUN CANTONMENT, UTTARANKHAND - 248003' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அல்லது 'www.rimc.gov.in' என்ற வலைத்தளத்தின் மூலமாக தொகையை செலுத்தலாம்.

விண்ணப்ப படிவம் தங்கள் முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், 'இணை இயக்குநர், 2-வது தளம், பெருந்தலைவர் காமராஜர் நுாற்றாண்டு கல்வி வளாகம், அண்ணா நகர், புதுச்சேரி' என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு ஆண்கள் மட்டும் சேர்வதற்கான விண்ணப்பம் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in