சென்னையில் வறட்சிக்கு மோசமான ஆட்சியே காரணம்- கிரண்பேடி புகார்

சென்னையில் வறட்சிக்கு மோசமான ஆட்சியே காரணம்- கிரண்பேடி புகார்
Updated on
1 min read

சென்னையின் வறட்சிக்கு மோசமான ஆட்சியே காரணம் என்று வாட்ஸ்அப்பில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார். 

சென்னை தற்போது கடும் வறட்சியை சந்தித்து வருகிறது. இதனை அறிந்து ஹாலிவுட் நடிகர் தொடங்கி பல்வேறு தரப்பினர் கருத்துக்களையும், தங்களது எண்ணங்களையும் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண்பேடி சென்னை வறட்சி குறித்து இன்று சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள கருத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. இதே நகரம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ளத்தில் முழ்கியது. இந்த பிரச்சனை எங்கே ஏற்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு பதிலாக மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையும்கூட காரணமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in