

தமிழக தலைமைச் செயலர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
நீலகிரி மாவட்ட டிஆர்ஓ பி.செல்வராஜ் மதுரை மாவட் டத்துக்கும், பெரம்பலூர் டிஆர்ஓ ஏ.அழகிரிசாமி தருமபுரி சிப்காட் சிறப்பு டிஆர்ஓவாகவும், சென்னை நில அளவை மற்றும் நிலவரி திட்டத் துறை டிஆர்ஓ ஏ.ராஜசேகரன் சேலம் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளராகவும், பி.மேட்டுப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை டிஆர்ஓ பி.மணிவண்ணன், திருவாரூர் உணவுப் பொருள் வழங்கல் முதுநிலை மண்டல மேலாளராக வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தருமபுரி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை டிஆர்ஓ ஆர்.கீர்த்தி பிரியதர்ஷினி, சென்னை பெங்களூரு விரைவு நெடுஞ்சாலை சிறப்பு டிஆர்ஓவாகவும், தருமபுரி சிப்காட் சிறப்பு டிஆர்ஓ துர்காமூர்த்தி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு டிஆர்ஓ ஆகவும், சென்னை ஆவின் டிஆர்ஓ வி.கண்ணன், திருச்சி டாஸ்மாக் முதுநிலை மண் டல மேலாளராகவும், சென்னை பெருநகர மாநகராட்சி மண்டல அதிகாரி எஸ்.அனிதா, அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் இயக்கக பிரிவு பொது மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய ஊரக சுகாதார இயக்க, மாநில திட்ட மேலாளராக ஆர்.அழகுமீனா தொடர்வார். திருப்பத்தூர் கூட்டுறவு சர்க் கரை ஆலை டிஆர்ஓ சி.ராஜேந் திரன், பெரம்பலூர் மாவட்ட டிஆர்ஓ வாகவும், சென்னை டிஆர்ஓ எஸ்.கருணாகரன், தமிழ்நாடு தகவல் ஆணைய செயலராகவும், அப்பதவியில் இருந்த எஸ்.அசோக்குமார் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை நிர்வாக அதிகாரியாக வும், சென்னை இந்து அற நிலையங்கள் துறை கோயில் நிலங்கள் பிரிவு டிஆர்ஓ எஸ்.நிர்மலா, நீலகிரி டிஆர்ஓவாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு டிஆர்ஓ கே.நர்மதா, சென்னை இந்து அறநிலையங்கள் துறை கோயில் நிலங்கள் பிரிவு டிஆர்ஓ ஆகவும், தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி என்.காளிதாஸ், சென்னை மாவட்ட டிஆர்ஓவாகவும், மதுரை கலால் உதவி ஆணையர் எஸ்.சாந்த குமார், தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேசன் பொது மேலாளரா கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.