Last Updated : 30 Jun, 2019 12:00 AM

 

Published : 30 Jun 2019 12:00 AM
Last Updated : 30 Jun 2019 12:00 AM

அனைத்து மாவட்டங்களிலும் மழைநீர் கட்டமைப்பை ஒருங்கிணைக்க குழுக்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

மாநிலம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களி லும் ஒருங்கிணைந்த குழுக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர்எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள் ளார்.

சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்த செய்முறை கருத்தரங்கம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று, ‘மழைநீர் சேகரிப்பு செய்முறை திட்ட விளக்க விழிப்புணர்வு’ கையேட்டை வெளியிட்டு பேசிய தாவது:மாநிலம் முழுவதும் மழைநீர்சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. பொது மற்றும் தனியார் கட்டிடங்களில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட மழைநீர் சேக ரிப்பு கட்டமைப்புகள் புத்துயிர் பெறுவது மட்டுமல்லாது, புதிய கட்டமைப்புகளை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளாட்சி அமைப்புகள் மூலம்,மழைநீர் சேகரிப்பின் அவசியத்தையும், செயல்படுத்தும் விதங்கள்குறித்தும் விரிவான விளக்கங் களுடன் தொடர் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டாலும், தனி மனிதனின் பங்களிப்பு அவசியம்.

200 குழுக்கள் அமைப்பு

சென்னை மாநகராட்சியில் மழைநீர் கட்டமைப்புகளை ஆய்வுசெய்யவும், கட்டமைப்பு இல்லாதகட்டிடங்களில் புதிய கட்டமைப்பு களை ஏற்படுத்தவும், மாநகராட்சி வார்டு பொறியாளர், வரி வசூலிப்பவர், சுகாதார ஆய்வாளர், குடிநீர்வாரிய பொறியாளர், குடிநீர் பணிமனை மேலாளர் ஆகிய 5 பேரைக் கொண்டு, மாநகராட்சி மண்டல அலுவலர் தலைமையிலும், குடிநீர்வாரிய வட்டார பொறியாளர் தலைமையிலும், வார்டு வாரியாக 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2 லட்சம் கட்டமைப்புகள்

இக்குழுக்கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள், தங்கள் வார்டுகளில் உள்ள தலா 1,000கட்டிடங்களை ஆய்வு செய்து,மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தாத கட்டிடங்களைக் கண்டறிந்து, அங்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த உரிமையாளர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப்படும்.

அவ்வாறு 200 வார்டுகளிலும் சேர்த்து 2 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதிதாகஏற்படுத்த இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. பயன்பாடற்று கிடக்கும் கட்டமைப்புகளை பழுது பார்க்கவும் இக்குழு ஆலோசனை வழங்கும்.

இதுபோன்ற ஒருங்கிணைந்த குழுக்கள் அனைத்து மாவட்டங் களிலும் அமைக்கப் படும். அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.

வேலுமணி பேசினார்.

இக்கருத்தரங்கில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் த.ந.ஹரிஹரன், செயல் இயக்குநர் த.பிரபுசங்கர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x