அணுக்கழிவு மையத்தை எதிர்த்து கூடங்குளம் கிராம சபையில் தீர்மானம்

அணுக்கழிவு மையத்தை எதிர்த்து கூடங்குளம் கிராம சபையில் தீர்மானம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நேற்று நடத்தப்பட்டன. கூடங்குளம், விஜயாபதி மற்றும் வடக்கன் குளத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில், கூடங் குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி மக்கள் மனு அளித்தனர்.ஆனால், விஜயாபதி ஊராட்சியில் இத்தீர் மானத்தை நிறைவேற்ற அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வள்ளி யூர் ஏடிஎஸ்பி ஹரிஹர பிரசாத் தலைமையிலான போலீஸார், மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இதனால் கூட்டம் பாதியில் முடிவடைந்தது.

கூடங்குளத்தில் நடைபெற்ற ஊராட்சி கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பெண்களும், ஆண் களும் திரண்டுவந்து, அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்று மாறு வலியுறுத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுபோல், வடக்கன்குளத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திலும் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேநேரத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற பல கிராம சபை கூட்டங்களில் பொது மக்கள் வலியுறுத்தியும் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப் படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in