

கூடங்குளத்தில் உள்ள 2 அணு உலைகளிலும் அழுத்தத்தை பதிவு செய்ய போதுமான அளவுக்கு இயக்க சென்சார்கள் உள்ளன என்று அணுமின் திட்ட பொது விழிப் புணர்வு குழுத் தலைவர் மற்றும் பயிற்சி கண்காணிப்பாளர் ஆர்.ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கூடங்குளம் அணுமின் நிலையம் 1 மற்றும் 2-ல் கடந்த 2 ஆண்டுகளாக ஸ்ட்ரெய்ன் மானிடர் எனப்படும் அழுத்த கண்காணிப்பு சென்சார்கள் செயல்படவில்லை என்ற தகவல் உண்மைக்கு புறம் பானது. கூடங்குளம் அணு உலை கட்டிடம் 2 அடுக்கு சுவர்களால் ஆனது. பிரிஸ்ட்ரெஸ்ட் கான்கிரீட் டால் உருவாக்கப்பட்ட உள்சுவர் (முதன்மை சுவர்) இரும்பு தகடு களை கொண்டது. வெளிச்சுவர் ரீஇன்போர்ஸ்ட் கான்கிரீட்டால் உருவாக்கப்பட்டு உள்ளது.
கூடங்குளம் அணுஉலையின் முதன்மை கட்டமைப்பில் உள்ள கான்கிரீட் பகுதிகளிலும், இரும்பு கம்பிகளிலும் அழுத்தத்தை அளவிட பதிக்கப்பட்ட சென்சார்கள் (எம்பெடட் சென்சார்கள்) உள்ளன. இந்த சென்சார்கள் மட்டு மின்றி விலகல் அளவீடு சென்சார் களும் வெளியே பொருத்தப் பட்டுள்ளன.
எம்பெடட் சென்சார்களின் சோதனை முடிவுகள் சரிதானா என்று சரிபார்க்க இவை பயன்படு கின்றன. கூடங்குளத்தில் தேவை யைவிட மிக அதிகமான சென்சார் கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
கூடங்குளத்திலுள்ள 2 அணு உலைகளின் கட்டமைப்பு உறுதி செய்யப்பட்டு, அதன் பின்னரே அணுஉலையை இயக்கும் உரி மத்தை ஒழுங்குமுறை வாரியம் வழங்கியுள்ளது. இயக்க காலத் தின்போது ஒவ்வொரு பத்தாண் டுக்கு ஒருமுறை முழு வடி வமைப்பு - அழுத்தத்தில் கசிவு சோதனையும், ஒவ்வொருமுறை எரிபொருள் மாற்றும்போது பாதி வடிவமைப்பு- அழுத்தத்தில் கசிவு சோதனையும் மேற்கொள்ளப் படுகிறது.
இச்சோதனைகளுக்கு சென்சார் கள் அவசியம் இல்லை. ஆனா லும் அழுத்தத்தை பதிவு செய்ய இப்போதும் போதுமான அளவுக்கு இயக்க சென்சார்கள் கூடங் குளத்திலுள்ள 2 அணுஉலை களிலும் உள்ளன எனத் தெரிவித் துள்ளார்.அணு உலைகளின் கட்ட மைப்பு உறுதி செய்யப்பட்டு, அதன் பின்னரே அணு உலையை இயக்கும் உரிமத்தை ஒழுங்குமுறை வாரியம் வழங்கியுள்ளது.