

பொறியியல் படிப்புக்கான நேரடி கலந்தாய்வு நேற்றுடன் முடிவ டைந்தது. இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான ஆன் லைன் கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது.
பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் 1 லட்சத்து 72 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில் சேர 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். சான்றி தழ் சரிபார்ப்பு முடிவடைந்த நிலையில், அவர்களில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றனர். பொதுப்பிரிவினருக்கு ஆன்லைன் கலந்தாய்வும் சிறப்பு பிரிவினர் மற்றும் தொழிற்கல்வி பிரிவினருக்கு நேரடி கலந்தாய்வும் நடத்தப்படும் என தொழி்ல்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்தது.
நேரடி கலந்தாய்வு நிறைவு
அதன்படி, முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு கடந்த 25 முதல் 27-ம் தேதி வரை சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத் தில் நேரடி கலந்தாய்வு நடத்தப் பட்டது.
முதல் நாளில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்தாய்வை தொடங் கிவைத்து தரவரிசையில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார். கடந்த 26-ம் தேதி தொழிற்கல்வி மாணவர்களுக் கான நேரடி கலந்தாய்வு தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி ஒருங்கிணைந்த பணிமனை வளா கத்தில் தொடங்கியது. இக்கலந் தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது.
பொது ஆன்லைன் கலந்தாய்வு
இந்த நிலையில், ஏற்கெ னவே திட்டமிட்டபடி பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது. இக்கலந்தாய்வு 5 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. முதல் சுற்றில் சுமார் 10 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கிறார்கள். முதலில் அவர் கள் கலந்தாய்வுக்கான கட்ட ணத்தை (ரூ.5,000. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் ரூ.1,000) ஆன் லைனில் குறிப்பிட்ட காலஅவ காசத்துக்குள் செலுத்த வேண்டும்.
அதன்பிறகு பிடித்தமான கல்லூரியையும், பாடப்பிரிவையும் ஆன்லைனில் தேர்வுசெய்ய குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்கப்படும். அதைத்தொடர்ந்து கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும். இந்த ஆணையை பதிவிறக்கம் செய்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சமர்ப்பித்து சேர்ந்து கொள்ளலாம்.